பழைய துணிகளை வாங்குவது போல ரூ.11 லட்சத்தை சுருட்டிய கும்பல்

சென்னையில் ஆதரவற்றவர்கள் முதியோருக்கு பழைய துணிகளை வாங்கிச் செல்வதாக கூறி 11 லட்சம் ரூபாய் திருடிய போலி அறக்கட்டளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழைய துணிகளை வாங்குவது போல ரூ.11 லட்சத்தை சுருட்டிய கும்பல்
x
சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த சுசீலா  வீட்டு வேலை செய்து வருகிறார்.சுசீலா வீட்டில் இல்லாத நிலையில், ஆதரவற்றவர்களுக்கு பழைய துணிகளை தரும்மாறு ஒரு கும்பல் கேட்டுள்ளது. இதனால், சுசிலா தன் வீட்டில் மூட்டை கட்டி வைத்திருந்த பழைய துணிகளை அவரது மகன் எடுத்து கொடுத்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த சுசிலாவிடம் பழைய துணிகளை தந்துவிட்டதாக மகன் கூற அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், பழைய துணி மூட்டையில் சுசிலா தாம் சேமித்த 11 லட்சம் ரூபாய் பணத்தை வைத்திருந்துள்ளார்.  இதனை தான் அவர் மகன் மோசடி கும்பலிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த கும்பல் கொடுத்த நோட்டீசில் உள்ள முகவரிக்கு சுசிலாவின் குடும்பத்தினர் நேரில் சென்றுள்ளனர். ஆனால், அங்கு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பதிலாக, பாழடைந்த வீடு மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா., பணம் திருட்டு போனது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் மோசடி கும்பல் பயன்படுத்திய ஆட்டோ வாடகைக்கு எடுத்தது என தெரியவந்தது. ஆட்டோவை வாடகைக்கு எடுத்த பெண் மகாலட்சுமியை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் பணத்தை திருடியதை ஓப்புக்கொண்டார். மேலும், அவர் வாரத்திற்கு ஒரு முறை, பெண்களுக்கு 500 ரூபாய் வழங்கி, ஆதரவற்றவர்களுக்கு துணிகளையும், பணத்தையும் பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டு, பிரித்து கொள்வோம் என்று போலீசாரிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதனையயடுத்து அவரை கைது செய்த போலீசார், 11 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். ஆதரவற்றோர் இல்லம் அரவிந்த் என்பவர் பெயரில் போலியாக இயங்கியதும், இவர் போலி பத்திரிகை நடத்தி, பல்வேறு நபர்களிட​மிருந்து பணத்தை பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்