செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
x
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி வண்டலூர் இடையே உயர்மட்ட பாலத்தின் கீழ்ப் பகுதியில் பராமரிப்பு பணியும், ஒத்திவாக்கம் பகுதியில் லெவல் கிராசிங் பதிலாக சுரங்க பாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால் இந்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு வழக்கம்போல் ரயில் சேவை தொடர்ந்து இருக்கும் எனவும், இடைப்பட்ட நேரத்தில் வைகை மற்றும் சோழன் விரைவு வண்டிகளும்  மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை அதிகாலை முதல் வழக்கம்போல மின்சார ரயில்கள் செங்கல்பட்டு சந்திப்பில் இருந்து மீண்டும் இயக்கப்படும் ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்