லிங்காராசனம் செய்து 10ஆம் வகுப்பு மாணவர் சாதனை - நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை பதிவு

வி௫துநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஷ்யாம் கணேஷ் கடந்த 5 ஆண்டுகளாக யோகாவில் பல சாதனைகளை படைத்து வரும் இவர், 3 முறை தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளார்.
x
வி௫துநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஷ்யாம் கணேஷ் கடந்த 5 ஆண்டுகளாக யோகாவில் பல சாதனைகளை படைத்து வரும் இவர், 3 முறை தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளார். இந்நிலையில் கைகளை கீழே ஊன்றி காலால் வில் அம்பு எய்தும் லிங்காராசனம் முறை மூலமாக 14 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை1 நிமிடம் 30 வினாடிகளில்  3  முறை எய்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த பெண் ஒ௫வர் தலைகீழாக நின்று ஒ௫முறை அம்பு எய்து 4 மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை அடைந்ததே சாதனையாக இ௫ந்தது. தற்போது அந்த சாதனையை மாணவர் ஷியாம் கணேஷ் முறியடித்துள்ளார். இந்த சாதனை நிகழ்வை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் குழுவினர் பதிவு செய்து மாணவர் ஷியாம் கணேஷ்க்கு சான்றிதழ் வழங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்