பாலாற்றில் 29 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திரா : மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா ?
பதிவு : ஜூன் 14, 2019, 06:15 PM
பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள 29 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்திக் கட்ட, அம்மாநில அரசு ரூ.42 கோடி நிதி ஒதுக்கியுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக -ஆந்திர எல்லை பகுதியில் பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணைகளால் தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக நின்றுள்ளது. கர்நாடகா மாநிலம்,  நந்திதுர்கா என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு கர்நாடகாவில் 60 கிமீ தொலைவும், ஆந்திராவில் 30  கிமீ தொலைவும்,  தமிழகத்தில் 140 கிமீ தொலைவும் பயணிக்கின்றது. 3 மாநில மக்களும் பயன்பெற்று வந்த , பாலாற்று நீரை கடந்த 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட சென்னை ராஜதானி - மைசூர் இடையேயான ஒப்பந்தத்தை மீறி கர்நாடகா அரசு சுமார் ஆயிரத்து 500 ஏக்கரில் கோலார் மாவட்டம் பேத்தமங்கலம் என்ற இடத்தில் அணை கட்டி நீரை தடுத்தது. மேலும், ராம்சாகர், பொக்கசமுத்திரம், விஷ்ணுசாகர் என  கர்நாடகாவில் 40 கிமீ தொலைவுக்குள் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏரிகளை கட்டி நீரை தேக்கி வைத்துள்ளனர். 

ஆந்திராவில் பாலாறு பயணிக்கும் 30 கிமீ தொலைவுக்குள் 29 தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு தொடங்கி கட்டி முடிக்கப்பட்ட அணைகளில், மீண்டும் 2014 ஆம் ஆண்டில் இருந்து  8 தடுப்பணைகளின் உயரத்தை 12 அடியில் இருந்து 30 அடியாக உயர்த்தியது. கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகள் பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி நீரைத் தேக்கியதன் விளைவாக தமிழகத்துக்கு பாலாற்று நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக வட மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளும், பாலாற்றுப் படுகைகளும் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. பாலாற்று படுகையில் சுமார் 30 அடியில் கிடைத்த நிலத்தடி நீரும் தற்போது ஆயிரத்து 500 அடிக்குக் கழே சென்றுள்ளது.

பாலாற்று நீரை கர்நாடக மாநிலம் முழுவதுமாக தேக்கியபோதும், ஆந்திர வனப்பகுதிகளில்  பெய்யும் மழை  பாலாறு வழியாக தமிழகத்துக்கு கிடைத்ததையும் ஆந்திரா தடுக்கிறது. அதன் காரணமாக, தமிழக - ஆந்திர எல்லையான வாணியம்பாடிக்கு கூட பாலாற்று தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 21 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தி கட்டுவதற்காக 42 கோடிரூபாய் நிதி ஒதுக்கி ஆந்திர அரசு அறிவித்துள்ளதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால் பாலாற்றில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது என்று  விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  

தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்பணைகள் கட்டும் பணியினை தற்போது தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

246 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

220 views

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

81 views

காவிரியில் கூடுதல் நீர் திறக்க வேண்டும் - ராமதாஸ்

கர்நாடகா அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

50 views

பிற செய்திகள்

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"

1113 views

உணவுத்திருவிழாவுக்கு மக்கள் அமோக ஆதரவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

மதராசப்பட்டினம் விருந்து என்ற உணவுத் திருவிழாவுக்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

99 views

பேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்

பேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்

43 views

பால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

46 views

ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையால் ஆபத்து - தொல். திருமாவளவன்

பாஜக முன்வைக்கும் ஒரே நாடு ஒரே மொழி கொள்கை இந்தியாவை துண்டாக்க வழி வகுக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவனவன் எம்பி செய்தியாளர்களிடம் கூறினார்.

31 views

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.