திருச்சி விமான நிலையத்தில் அரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் அரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
x
திருச்சி விமானநிலையத்தில்,  மலேசியாவில் இருந்து  கடத்தி வரப்பட்ட அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ரகமது கான் என்பவர் தனது ஆசனவாயில் மறைத்து வைத்து 468 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், முகமது ரகமது கானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்