விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
x
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணம் அடைந்தார். அவரது உடல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாமணி, திருமணம் ஆகாதவர். விழுப்புரம் மாவட்ட திமுக அவைத்தலைவராகவும் அவர் பதவி வகித்து வந்தார். திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம் அடைந்ததை தொடர்ந்து  சட்டப்பேரவையில் திமுக வின் பலம் தற்போது 100 ஆக குறைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்