"நகைக்கடன் ரத்து - வாய்ப்பு இல்லை" - அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்களை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று, அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
x
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்களை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என்று, அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில், மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, கடனுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையில், நகைக் கடன் ரத்து செய்யப்படும் என்ற  அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ, திட்டவட்டமாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்