மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்தில் தேவையற்ற சான்றுகள் - வைகோ கண்டனம்

'நீட்' தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களை வடிகட்டி, அவர்களுக்கான வாய்ப்பை மறுக்கும் சதி என வைகோ தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்தில் தேவையற்ற சான்றுகள் - வைகோ கண்டனம்
x
மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்தில் தேவையற்ற சான்றுகள் கேட்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பாஜக அரசு தகர்த்து எறிந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.  மருத்துவக் கல்வி விண்ணப்பத்தில்  + 2 ஹால் டிக்கெட் , பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றுகள், சாதிச் சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளன என்றும், இது  'நீட்' தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களையும் வடிகட்டி, அவர்களுக்கான வாய்ப்பை மறுக்கும் சதி என்றும் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக அந்த அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் திருப்ப பெற வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்