வாயு புயல் காரணமாக நெல்லை கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்

வாயு புயல் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுகிறது.
வாயு புயல் காரணமாக நெல்லை கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
x
வாயு புயல் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில்  கடல் சீற்றம் காணப்படுகிறது. நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால்,  கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான பகுதிகளில் வைக்குமாறும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் சூறைக்காற்று :



கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வருகிறது.  கடற்பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் ஐந்தாவது நாளாக 500க்கும் மேற்பட்ட கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே, மேற்கு கடற்பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில், தற்போது நாட்டுப்படகுகளும் செல்லாததால் மீன் விற்பனை அடியோடி முடங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்