123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை
பதிவு : ஜூன் 11, 2019, 03:51 PM
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி மத்திய ஊழல் தடுப்பு கணகாணிப்பு ஆணைய அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக காத்து கிடக்கின்றனர்.
அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச  புகார்கள் தொடர்பாக மத்திய  ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் இறுதி விசாரணை நடத்தும். இதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட துறையால் 4 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 123 அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்கள்  தொடர்பாக  விசாரணை நடத்த இதுவரை சம்பந்தப்பட்ட துறைகளால் அனுமதி வழங்கப்படவில்லை  என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 57  பேர் அரசு அதிகாரிகள் என்றும், 45 பேர் பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 வழக்குகள் மத்திய பணியாளர் துறை அமைச்சகத்திலும், ரெயில்வே அமைச்சகம் மற்றும் உத்தரபிரதேச மாநில அரசிலும் தலா 5 வழக்குகளும் விசாரணைக்காக அனுமதி கோரி காத்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு, அமலாக்கத்துறை இயக்குனரக உதவி இயக்குனர்,  வருமான வரித்துறை அதிகாரி ஆகியோர் மீதான லஞ்ச புகார் தொடர்பாக விசாரணை நடத்த இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் , ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, இமாச்சல் பிரதேஷ், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒரு  வழக்கு தொடர்பாக விசாரணைக்கான  அனுமதி  கிடைக்கவில்லை என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1155 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4545 views

பிற செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

0 views

மருத்துவர்களையும், மருத்துவமனையையும் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் - ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்

மருத்துவர்களையும், மருத்துவமனையையும் பாதுகாக்க மத்திய அரசு, புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தி உள்ளார்.

2 views

நாகை : தண்ணீர் பிரச்சினை குறித்து பேச கிராம சபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர்

நாகை மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து பேச கிராம சபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

7 views

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - எம்.எல்.ஏ. சரவணன்

திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார்.

18 views

காவிரியில் தண்ணீர் இருந்தும் விநியோகம் செய்யப்படவில்லை - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய கோரி திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

25 views

பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.