கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் அணு கழிவுகள் சேமிப்பு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் அணு கழிவுகளை சேமித்து வைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்திற்குள் அணு கழிவுகள் சேமிப்பு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
x
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகள் மூலம் நாளொன்றுக்கு 2000 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணு மின் உலையில் இருந்து எடுக்கப்படும் அணு கழிவுகள், அங்குள்ள மையத்தில் சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்த கருத்து கேட்பு கூட்டம் அடுத்த மாதம் 10ஆம் தேதி அன்று ராதாபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான அணுக்கழிவுகள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அணுமின் நிலையத்தின் புதிய முடிவுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்