"இலவச பேருந்து பயண அட்டை விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்"
x
பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண  அட்டை விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் பள்ளியின் வாகனங்களை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.  பேருந்து பயண  அட்டை வழங்கப்படும் வரை, சீருடை அணிந்த மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும் அவர்  தெரிவித்தார். பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்