23 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது

வெளிநாட்டில் இருந்து 23 கிலோ தங்கம் கடத்தி வந்த 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
23 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது
x
வெளிநாட்டில் இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து  மாறுவேடத்தில் கண்காணித்த அதிகாரிகள், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய 4 பேரை சுங்க இலாகா அதிகாரி ஒருவர் சோதனை இல்லாமல் வெளியே அனுப்ப முயன்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தி 13 கிலோ தங்க கட்டிகள், ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்,  விலையுர்ந்த கேமரா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், மறைத்து வைத்திருந்த 10 கிலோ தங்க கட்டிகள், 24 லட்சம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றினர். சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த அவர்களுக்கு உதவியதாக  சுங்க இலாகா அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.  பறிமுதல் செய்தவற்றின் மதிப்பு சுமார் எட்டரை கோடி ரூபாய் என்று கூறிய அதிகாரிகள், தொடர்புடைய சர்வதேச கடத்தல் கும்பலுக்கு வலை வீசியுள்ளதாகவும் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்