கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் : நிவாரணம் வரவில்லை என குற்றச்சாட்டு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு 7 மாதங்கள் ஆகியும் நிவாரணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களை  புரட்டிப் போட்டது. நாகை மாவட்டத்தில்  கோடியக்கரை முதல் நாகூர் வரை உள்ள  விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள்  தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பெரும் பாதிப்பை சந்தித்தனர்.   புயலில்  வீடு, மரம், படகுகளை இழந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கும் என்று அறிவித்தது, முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட பயனாளிகளின் குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த நிவாரணத் தொகை  முழுமையாக இன்னும் வழங்கப்பட வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. வீடு இழந்தவர்களுக்கு அரசு அறிவித்த  படி  7 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர் 

Next Story

மேலும் செய்திகள்