தமிழகத்திலும் பாஜக தனது கொடியை ஏற்றும் - திருப்பதியில் பிரதமர் மோடி பேச்சு

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வந்தடைந்த பிரதமர் மோடி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் உரையாற்றினார்.
தமிழகத்திலும் பாஜக தனது கொடியை ஏற்றும் - திருப்பதியில் பிரதமர் மோடி பேச்சு
x
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வந்தடைந்த பிரதமர் மோடி, விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் உரையாற்றினார். ஏழுமலையான் அருளால் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ளேன் என்றார். இந்த வெற்றியை கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி என்ற அவர், மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றார். ஆந்திரா மட்டுமல்லாது தமிழகத்திலும் பாஜக தனது கொடியை ஏற்றும்  என்றும் அவர் குறிப்பிட்டார். ஆந்திர மாநில வளர்ச்சிக்காக எந்தவித உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும்,  இனிவரும் காலங்களிலும் எங்களுடைய ஆட்சியே தொடரும் என்றும் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்