புழல் ஏரி வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரி வறண்டதால் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரி வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் ஏற்கனவே வறண்டு விட்ட நிலையில், புழல் ஏரியில் தண்ணீர் மிக குறைந்த அளவிலேயே இருந்ததால் ராட்சத மோட்டார்கள் மூலம் வினாடிக்கு 6 கனஅடி வீதம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, சென்னைக்கான குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவை கொண்ட புழல் ஏரியில் தற்போது, 2 மில்லியன் கன அடி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வந்த நான்கு முக்கிய ஏரிகளும் வறண்டு, தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்