தண்ணீர் இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்...

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதி விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
x
பச்சைப் பசேல் என  முப்போகம் விளைந்த தஞ்சை தரணியான காவிரி டெல்டா பகுதி  இன்று வறண்டு காணப்படுகிறது. பருவ மழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும் தற்போது ஒரு போகம் விவசாயம் கூட செய்ய முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  ஜூன் 12 ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்  என ஆண்டு தோறும் காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் இருந்தும் உரிய காலத்தில் பயிர்சாகுபடி செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் கூறுகின்றனர். 

கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பி வழியும் போது, அதை திறந்து விடும் வடிகாலாக தமிழகம் மாறி விட்டதாக கூறும் விவசாயிகள் , கனமழையின் போது கடலில் வீணாக கலக்கும் மழை நீரை சேமித்து வைக்க கடைமடை பகுதியில் உரிய தடுப்பணைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண  நிரந்தர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்