மருத்துவ படிப்பு சேர்க்கை ஆன்லைன் பதிவு தொடக்கம்... 1 மணி நேரத்தில் 1500 மாணவர்கள் பதிவு

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
x
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டியளித்துள்ள மருத்துவ படிப்பு சேர்க்கை செயலாளர் செல்வராஜன், ஒரு மணி நேரத்திற்குள் சுமார் ஆயிரத்து 500 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக கூறினார். வரும் 20-ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்  தெரிவித்தார். அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என இரண்டுக்கும் விண்ணப்பிக்க விரும்பினால் இரண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் செல்வராஜன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்