சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
x
சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.  ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில்  பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பாலத்தை திறந்து வைத்தார்.

"விபத்துக்களை தடுப்பதற்காக சாலை திட்டம்" 


விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விபத்து மற்றும் உயிர் சேதங்களை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 8 வழி விரைவு சாலை திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், யாரிடமும் எதையும் பறித்து எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது எனவும் கூறினார். பொதுமக்கள் மற்றும் தமிழக அரசு ஒத்துழைப்புடன் 8 வ​ழி பசுமை விரைவு சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

விழாவில் பங்கேற்ற திமுக எம்பி. , எம்எல்ஏ



ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தி.மு.க.வினரும் பங்கேற்றனர். சேலம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 



Next Story

மேலும் செய்திகள்