நீட் தேர்வு ரத்து தொடர்பான தமிழக சட்டப் பேரவை தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும் - வைகோ

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கின் விசாரணை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
x
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கின்  விசாரணை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. சென்னை ராணி சீதை மன்றத்தில், கடந்த 2009 ஜூனில் நடந்த, 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ஆயிரம் விளக்கு போலீசார், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜரானார். வழக்கு விசாரணை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நீட் விவகாரத்தில், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை  மத்திய அரசு மதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்