"நீட் தேர்வுக்கு எதிராக திமுக குரல் கொடுக்கும்" - ஸ்டாலின்

நீட் தேர்வு தோல்வியால், தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா ஆகியோரின் மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக குரல் கொடுக்கும் - ஸ்டாலின்
x
நீட் தேர்வு தோல்வியால், தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீ, வைஷியா  ஆகியோரின் மரணம் இதயத்தை நொறுக்கும் செய்தி என திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில், நீட் விலக்கு எனும் மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது, மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை என்பதை பிரதமர் இப்போதாவது உணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள் எனவும் அறிக்கையொன்றில், ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்