நீட் தேர்வு தோல்வி : மாணவி தூக்கிட்டு தற்கொலை...

நீட் தேர்வில் தோல்வியடைந்த‌ மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
திருப்பூரில் நீட் தேர்வில் தோல்வியடைந்த‌ மாணவி ஒருவர், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காட்டை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ 12 ஆம் வகுப்பில், 600 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். டாக்டராக வேண்டும் என கனவு கொண்ட மாணவி ரிதுஸ்ரீ, கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார்.  நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மாணவி ரிதுஸ்ரீ தேர்வில் தோல்வி அடைந்தார். தனது டாக்டர் கனவு தகர்ந்த‌தால் மனமுடைந்த மாணவி ரிதுஸ்ரீ தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் தாயார் ராஜலெட்சுமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்