காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
x
மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா,  அரசியல் சட்டத்திற்கு புறம்பான கருத்தை கூறியிருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வரைவு அறிக்கையை மத்தியஅரசு தயார் செய்தது தவறு என்றும் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் கூறியது போல் ஜூன் மாதத்திற்குள் கர்நாடகம், 9 புள்ளி 2 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க  வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ராஜிவ்  கொலையாளிகள் 7 பேர் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம்தான் எதுவும் நடைபெற வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்