எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மருத்துவப் படிப்பு : ஆன்லைன் முறையில் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்பிபிஎஸ் -  பிடிஎஸ் மருத்துவப் படிப்பு : ஆன்லைன் முறையில் விண்ணப்பம்
x
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதையடுத்து நீட் தேர்வில் அடிப்படையில் தகுதி பெறக்கூடிய தமிழக மாணவர்கள், எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு வரை அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் மூலமாகவும், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, எம்பிபிஎஸ் படிப்பில், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 3 ஆயிரத்து 328 ம், பல் மருத்துவ படிப்பில் ஆயிரத்து 198 இடங்களும் உள்ளன. இந்த ஆண்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நெல்லை மருத்துவ கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் என, எம்பிபிஎஸ் படிப்பில் 400 இடங்கள் வரை அதிகரித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்