நீர் தேக்கம், குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைப்பு : அமைச்சர்கள் வேலுமணி, பெஞ்சமின் பங்கேற்பு

சென்னையின், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் மூன்றாவது ஆலை தொடங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
நீர் தேக்கம், குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைப்பு : அமைச்சர்கள் வேலுமணி, பெஞ்சமின் பங்கேற்பு
x
பம்மல் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் சிட்லபாக்கம் பேரூராட்சியில் புதிய நீர் தேக்க திட்டம் ஆகியவற்றை அமைச்சர் வேலுமணியும்,​​ அமைச்சர் பெஞ்சமினும் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் மூலம், செங்கழுநீர் மலை கல்குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து பம்மல் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, 3 கோடி ரூபாயிலான திட்டம் மூலம், மாதம்பாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என்றார். 2014 ஆம் ஆண்டு 420 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டதாகவும், தற்போது இரண்டாயிரத்து நானூறு மில்லியன் லிட்டர் தண்ணீர், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படுகிறது என்றார். சென்னையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, நெம்மேலியில், கடல்நீர் சுத்திகரிப்பு மூன்றாவது ஆலை அடிக்கல் நாட்ட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்