போலீஸ் நிழற்குடையை சுத்தம் செய்த குதிரைக்காரர்...

போக்குவரத்து போலீசாரின் நிழற்குடையை குதிரைக்காரர் ஒருவர் சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டைப் பெற்று வருகிறது.
போலீஸ் நிழற்குடையை சுத்தம் செய்த குதிரைக்காரர்...
x
போக்குவரத்து போலீசாரின் நிழற்குடையை குதிரைக்காரர் ஒருவர் சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டைப் பெற்று வருகிறது.  நாகை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை சாலையில், போக்குவரத்து போலீஸ் நிழற்குறை உள்ளது. அதில் பொதுமக்கள் வீசிச் செல்லும் குப்பைகள் மத்தியிலேயே நின்று போக்குவரத்து போலீசார் பணி செய்து வருகின்றனர். அதைப் பார்த்த குதிரைக்காரர் ஒருவர் போலீஸ் நிழற்குடையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். அந்த காட்சியை படம் பிடித்தவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பியதால்,  குதிரைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்