தொடர்ந்து 6 வீடுகளில் திருட்டு : ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை

வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தங்கம் விடுதி நடத்தி வரும் ஜெகநாதன் நேற்று இரவு தனது வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
தொடர்ந்து 6 வீடுகளில் திருட்டு : ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை
x
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தங்கம் விடுதி நடத்தி வரும் ஜெகநாதன் நேற்று இரவு தனது வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 17 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் அதே கும்பல், வள்ளலார் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் புகழேந்தி, பெட்ரோல் பங்க் உரிமையாளர் எழில், மருத்துவர் அப்பு உள்ளிட்ட 5 பேரின் வீடுகளில் கொள்ளையடித்து சென்றுள்ளது. மருத்துவர் அப்புவின் வீட்டில் கொள்ளையடித்த பிறகு கொள்ளையர்கள் அங்கேயே அமர்ந்து, பிரியாணி சாப்பிட்டு விட்டு மது அருந்தியும் சென்றுள்ளனர். 6 வீடுகளிலும் சேர்த்து மொத்தம் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்