விழுப்புரம்-தூத்துக்குடி, 4 வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நில மதிப்பு தொகை நிர்ணயம் செய்ததில் மோசடி

விழுப்புரம் - தூத்துக்குடி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்தில் நில மதிப்பு தொகை நிர்ணயம் செய்ததில் மோசடி நடந்துள்ளதாக வட்டாட்சியர் அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம்-தூத்துக்குடி, 4 வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நில மதிப்பு தொகை நிர்ணயம் செய்ததில் மோசடி
x
விழுப்புரம் - தூத்துக்குடி இருவழிச் சாலையை 6 ஆயிரத்து 431 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பாக நாகை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை பகுதிகளில் கையகப்படுத்திய நிலங்களுக்கு அரசு நிர்ணயித்தபடி சதுர அடிக்கு 4 ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக வெறும் 40 ரூபாய் மட்டுமே வங்கி கணக்கில், 2 நாட்களுக்கு முன் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  நிலம் வழங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்