ராக்கெட் ஏவு தளம் அமைக்க எதிர்ப்பு - தூத்துக்குடி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ராக்கெட் ஏவுதளம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
ராக்கெட் ஏவு தளம் அமைக்க எதிர்ப்பு - தூத்துக்குடி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
x
தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே உள்ள பெருமாள்புரம், அழகப்பபுரம்,போன்ற கிராம பகுதிகளில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அளவை பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள் பெருமாள்புரம், அழகேச புரம்,போன்ற கிராம பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதை தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.  ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பாதிப்படைய கூடும் என்றும்  அவர்கள் அச்சம் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்