மதம் மாறி திருமணம் செய்துக்கொண்டதுக்கு எதிர்ப்பு : கவுரவ கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் மீது இளம்ஜோடி புகார்

சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டியை சேர்ந்த கோபி மற்றும் சீமாட்டி, பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொண்டனர்.
மதம் மாறி திருமணம் செய்துக்கொண்டதுக்கு எதிர்ப்பு : கவுரவ கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் மீது இளம்ஜோடி புகார்
x
சேலம் மாவட்டம் சேலத்தாம்பட்டியை சேர்ந்த கோபி மற்றும் சீமாட்டி, பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக்கொண்டனர். இந்நிலையில் இருவரும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இளம் தம்பதிகளான இவர்கள் வெவ்வேறு மதம் என்பதால் இவர்கள் காதல் திருமணத்துக்கு சீமாட்டியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தங்களை பிரிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருவதாகவும், கவுரவ கொலை செய்வோம் என்று மிரட்டுவதாகவும் தன் பெற்றோர் மீது சீமாட்டி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்