அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக புகார்: 6 வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ளசின்ன ஏரியில் அரசு அனுமதி பெறாமல் அளவிற்கு அதிகமாக மண் அள்ளி சென்ற 6 வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக புகார்: 6 வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்
x
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள சின்ன ஏரியில் அரசு அனுமதி பெறாமல் அளவிற்கு அதிகமாக மண் அள்ளி சென்ற 6 வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் அருகேயுள்ள சின்ன ஏரியில்,  தமிழக அரசின் உத்தரவை மீறி சிலர் 30 அடிக்கு மேலாக  மண் தோண்டி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த  அப்பகுதி பொதுமக்கள் இரண்டு ஜேசிபி இயந்திரம் மற்றும் நான்கு டிப்பர் லாரிகளை  சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்