மெரினா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள்...காவல் துறையினர் பிடிக்க முயற்சித்ததால் தப்பியோட்டம்

மெரினா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் மடக்கி பிடிக்க முயற்சித்தபோது இருசக்கர வாகனத்தை சாலையில் விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
மெரினா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள்...காவல் துறையினர் பிடிக்க முயற்சித்ததால் தப்பியோட்டம்
x
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு போர் நினைவு சின்னத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் ரேசில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த கிழக்கு மண்டல இணை ஆணையர் ஜெயகெளரி இளைஞர்களை பிடிக்க மெரினா போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ் தலைமையில் காவலர்கள் கலங்கரை விளக்கம் அருகே சாலையில் இரும்பு தடுப்புகளை அமைத்து இளைஞர்களுக்காக காத்திருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் வந்த வழியிலேயே வாகனங்களை திருப்பி தப்பி செல்ல முயற்சித்தனர். திரும்பி செல்ல முடியாததால் வாகனங்களை சாலையிலேயே விட்டு விட்டு தப்பிப்சென்றனர். இதனையடுத்து இளைஞர்கள் விட்டுசென்ற 11 வாகனங்களை பறிமுதல் செய்த போலிசார் வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்