திருவாரூர் : கணவனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மனைவி

திருவாரூர் அருகே, குடிபோதையில் தகராறு செய்த கணவனை சுத்தியலால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் : கணவனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மனைவி
x
திருவாரூர் அருகே அகரத்திருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி சித்ரா. குடிப்பழக்கத்துக்கு அடிமையான ரவி, தினமும் வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இருவருக்கும் இடையே பிரச்சினை வெடித்ததில் ஆத்திரமடைந்த சித்ரா, தன் கணவர் ரவியை சுத்தியலால் தலையில் அடித்தார். இதில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சித்ரா திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்தார். ரவியின் உடலை மீட்ட போலீசார், சித்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்