தெர்மோகோல் தொழில்நுட்பத்தில் மாடிவீடு...

பெரம்பலூர் அருகே தெர்மோகோலை பயன்படுத்தி கட்டப்பட்டு வரும் வீட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தெர்மோகோல் தொழில்நுட்பத்தில் மாடிவீடு...
x
மணல், செங்கல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் விலையேற்றம் பலரின் வீடு கட்டும் கனவை தகர்த்து வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர், தெர்மோகோலை பயன்படுத்தி கட்டிவரும் வீடு, அத்தகைய செலவை குறைக்கும் வகையில் உள்ளது. செங்கல், மணல், ஜல்லி எதுவும் இன்றி, தெர்மோகோல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடுகள் கட்டும் போது, பொருட்செலவு 50 சதவீதம் குறைவதுடன், குறைந்த காலத்தில் வீட்டை கட்டிமுடிக்க முடியும் என்கின்றனர் அத்துறை நிபுணர்கள்.

புயல், சூறாவளி, கடும் மழை போன்ற அனைத்து இயற்கை சீற்றங்களையும் தாங்கும் சக்தி இந்த தெர்மோகோல் வீடுகளுக்கு உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இணையதளம் மூலம் தெர்மோகோல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்படும் வீடுகள் குறித்து அறிந்து கொண்டதாகவும், முதலில் மறுப்பு தெரிவித்த தனது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த பிறகே 10 லட்சம் ரூபாய் செலவில் 2 தளங்களை கொண்ட வீட்டை கட்டி வருவதாகவும் ராமர் தெரிவித்துள்ளார். தெர்மோகோல் தொழில்நுட்பம் சாமானிய மக்களின் வீட்டுக்கனவை, பூர்த்தி செய்யும் என்று கூறும் அத்துறை நிபுணர்கள் தற்போது இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்