ஓசூர் : தீயில் கருகிய மூங்கில் காடு - விலங்குகள், பறவைகள் தவிப்பு...

ஓசூர் அருகே உள்ள அய்யூர் மூங்கில்காடு தீயில் கருகியதும், அதற்குள் வன விலங்குகள் உணவின்றி தவிப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் : தீயில் கருகிய மூங்கில் காடு - விலங்குகள், பறவைகள் தவிப்பு...
x
ஓசூர் அருகே உள்ள அய்யூர் மூங்கில்காடு தீயில் கருகியதும், அதற்குள் வன விலங்குகள் உணவின்றி தவிப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடை தொடங்கி, அக்னி வெளியில் சுட்டெரிக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக  இரண்டாயிரத்து 789 ஹெக்டேர் பரப்பில் உள்ள அய்யூர் வனப்பகுதி தீப்பிடித்து எரிந்து நாசமானது. மூங்கில் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் முதல் குரங்குகள், பறவைகள் உள்ளிட்ட சிறிய வன உயிரினங்கள் வரை உணவின்றியும், தங்கும் இடமின்றியும் தவித்து வருகின்றன. தீயில் கருகி, வெட்டவெளியாக காட்சியளிக்கும் வனப்பகுதியில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குட்டிகளுடன் குரங்குகள் கடும் அவதியடைந்துள்ளன. விலங்கு மற்றும் பறவைகளை காப்பாற்ற வனப்பகுதிக்குள் தண்ணீர் வசதி ஏற்படுத்துமாறு வன ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்