ஓமலூர் : ஜல்லி கற்கள் பரப்பியதுடன் நின்றுபோன தார்சாலை பணி... மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் கடும் அவதி...

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தும்பிபாடி ஊராட்சி, கெண்டபெரியான் கிராம சாலை, ஜல்லி கற்கள் பரப்பியபடி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
ஓமலூர் : ஜல்லி கற்கள் பரப்பியதுடன் நின்றுபோன தார்சாலை பணி... மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் கடும் அவதி...
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தும்பிபாடி ஊராட்சி, கெண்டபெரியான் கிராம சாலை, ஜல்லி கற்கள் பரப்பியபடி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். தார் சாலை அமைக்குமாறு 5 ஆண்டுகள் கோரிக்கைக்கு பிறகு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கெண்டபெரியான் கிராம சாலையில் ஜல்லி கற்கள் பரப்பப் பட்டன. தார்சாலையாக மாற்ற ஜல்லி கற்கள் பரப்பியதுடன் கிடப்பில் போடப்பட்டதால், கற்கள் மேல்நோக்கி குத்தீட்டிகளாக நிற்கின்றன. இதனால், பொதுமக்கள், மாணவர்கள், முதியோர் நடக்க முடியாமல் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சாலை கரடுமுரடாக உள்ளதால், கர்ப்பினிகள் உள்ளிட்ட யாரையும் அழைத்துச் செல்லும் அவசரத் தேவைக்குக்கூட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதில்லை என்று கூறும் கிராம மக்கள், உடடினடியாக தார்சாலை அமைத்து தருமாறு வலியுறுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்