திருப்பூர் : பெட்ரோல் பங்கில் நூதன திருட்டு
திருப்பூர் மாவட்டம் ராக்கிப்பாளையத்தில், நூதன முறையில் பெட்ரோல் திருடப்படுவதை கண்டறிந்த வாடிக்கையாளர், ஊழியருடன் வாய் தகராறில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம் ராக்கிப்பாளையத்தில், நூதன முறையில் பெட்ரோல் திருடப்படுவதை கண்டறிந்த வாடிக்கையாளர், ஊழியருடன் வாய் தகராறில் ஈடுபட்டார். 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட கார் டேங்கில் 53 லிட்டர் தாண்டியும் பெட்ரோல் நிரப்பப்பட்டதால், இந்த திருட்டை வாடிக்கையாளர் சரவணன் கண்டுபிடித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், பெட்ரோல் உரிமையாளர் ஜெயக்குமாரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நூதன பெட்ரோல் திருட்டால், வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story