கட்சியில் இருந்து விலகிய உறவினர் கழுத்தறுத்து கொலை...தாயின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்
பதிவு : மே 27, 2019, 10:43 AM
கோவை மாவட்டம் பேரூர் அருகே, கட்சியில் மீண்டும் சேர மறுத்த இளைஞர், தாயின் கண்முன்னே கழுத்தறுத்து கொலை செயயப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடாகம் ரோடு குமாரசாமி காலனியைச் சேர்ந்த 26 வயது ஜோதிடர் சந்தோஷ், அரசியல் கட்சி ஒன்றில் இருந்து அண்மையில் விலகியுள்ளார். அவரை மீண்டும் கட்சியில் சேருமாறு அதேகட்சியில் உள்ள உறவினர் விஜயகுமார் என்பவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், ஜோதிடர் சந்தோஷ் மறுத்து வந்த நிலையில், இருவருக்கும் இதுதொடர்பாக மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. 

இந்நிலையில், தமது தாயாருடன் மோட்டர் சைக்கிளில் சென்ற சந்தோஷை வீரகேரளம் பகுதியில் மறித்த 3 பேர் கும்பல், கழுத்தை அறுத்துள்ளனர். இதில், மகனை காப்பாற்றுமாறு சந்தோஷின் தாயார் பிரேமலதா கதறி அழுதுள்ளார். ஆனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த சந்தோஷ், தாயின் கண்முன்னே உயிரிழந்துள்ளார். 

தகவலறிந்து வந்த போலீசார், சந்தோஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், உறவினர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்றுபேர், சந்தோஷை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். கட்சியில் சேர மறுத்ததால், கொலையா? வேறு ஏதேனும் காரணமா என தெரியாத நிலையில், தாயின் கண்முன்னே இளைஞர்  கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1254 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5507 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4549 views

பிற செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு : கோயில் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் பக்தர்களுக்கு ஊழியர்களே முதலுதவி சிகிச்சை அளிக்க பயிற்சி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

4 views

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு

தென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

4 views

தமிழகத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம்

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை விதிக்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளில் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க ​வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

7 views

ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

13 views

ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.