எல்.ஆர்.ஜி. நினைவுக் கோப்பை கூடைப் பந்தாட்டம் : இந்தியன் வங்கி சென்னை அணி வெற்றி

கரூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூடைப் பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி-சென்னை அணி வெற்றி பெற்றது.
எல்.ஆர்.ஜி. நினைவுக் கோப்பை கூடைப் பந்தாட்டம் : இந்தியன் வங்கி சென்னை அணி வெற்றி
x
கரூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூடைப் பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி-சென்னை அணி வெற்றி பெற்றது. இந்தியாவின் தலை சிறந்த 8-அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், இறுதிப்போட்டிக்கு இந்தியன் வங்கி சென்னை அணியும், பேங்க் ஆஃப் பரோடா பெங்களூரு அணியும் தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற  இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி  சென்னை அணி, 88-க்கு 79 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் பரிசை தட்டி சென்றது. வெற்றி பெற்ற, முதல் நான்கு அணிகளுக்கு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்