"சின்னதம்பி யானை நலமுடன் உள்ளது" - ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர்

சின்னதம்பி யானை நலமுடன் இருப்பதாகவும், உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டும் என்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் கூறியுள்ளார்.
சின்னதம்பி யானை நலமுடன் உள்ளது - ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர்
x
சின்னதம்பி யானை நலமுடன் இருப்பதாகவும், உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டும் என்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் கூறியுள்ளார். வரகளியாறு உள்ளிட்ட பகுதிகளில், மக்களோடு இனக்கமாக பழகிவந்த காட்டு யானை சின்னதம்பி, கடந்த  பிப்ரவரி 15ஆம் தேதி, கும்கி யானை உதவியுடன்  பிடிக்கப்பட்டு, டாப்சிலிப் பகுதியில் உள்ள முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது, சின்னதம்பி யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அந்தச் செய்தி வதந்தி என கூறியுள்ள ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கணேசன், மாதந்திர பரிசோதனைக்காக மருத்துவர்கள் வந்ததாக தெரிவித்தார். சின்னதம்பி யானை நலமுடன் இருப்பதாகவும், இரண்டு வாரத்தில் மரக்கூண்டில் இருந்து யானை வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்