ரயில் மூலம் குழந்தைகள் கடத்தல் : கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் தென்னக ரயில்வே

ரயில்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க, தென்னக ரயில்வே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
ரயில் மூலம் குழந்தைகள் கடத்தல் : கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் தென்னக ரயில்வே
x
ரயில்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை  தடுக்க, தென்னக ரயில்வே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. காணாமல் போகும் குழந்தைகளுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய  ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி பிரேந்திரகுமார், ரயில்கள் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், பாதுகாப்புபடை அதிகாரிகளுக்கு,  குழந்தைகளை மீட்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டதுடன், கண்காணிப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட ரயில்வே காவலர்களுக்கு பாராட்டு சான்றும் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்