கள்ளக்காதலுக்கு இடையூறு - மகன் கொலை

சென்னை அம்பத்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகனைஅடித்து கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறு - மகன் கொலை
x
கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புவனேஸ்வரி என்பவர் தனது கள்ளக்காதலன் கார்த்திகேயனுடன் அம்பத்தூர் மேனாம்பேடு, வ.ஊ.சி. நகரில் வசித்து வந்துள்ளார். அவர்களின் கள்ளக்காதலுக்கு 4 வயது மகன் கிஷோர் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரி, மகனை தோசை கரண்டியால் தாக்கியுள்ளார். இதில் தொடையில் நரம்பு முறிவு ஏற்பட்டதால் சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தான். இதனையடுத்து உடல் அடக்கம் செய்வதற்காக புவனேஸ்வரியின் சொந்த ஊரான திருவாரூக்கு சிறுவனின் உடலை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவனின் உடலில் காயம் இருந்ததை கண்ட புவனேஸ்வரியின் தாயார் போலீசில் அளித்தார். இதைத்தொடர்ந்து புவனேஸ்வரி மற்றும் கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்