கணவனையும், குழந்தையையும் மனைவியே கொன்ற வழக்கு : கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்
பதிவு : மே 19, 2019, 03:56 PM
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் கணவனையும், ஒரு வயது குழந்தையும் கொன்ற வழக்கில், ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தீபிகா தனது கணவர் ராஜாவும், மகன் பிரனீஷும் காணாமல் போனதாக கூறியிருந்தார். ஆனால், அவரே  தனது தாய் விஜயாவின் துணையுடன் இருவரையும் கொன்று அருகில் உள்ள ஏரிக்கரையோரம் புதைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழு முன்னிலையில், புதைத்த இடத்தை தோண்டி சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். விசாரணையில் தீபிகா, தனது கணவர் ராஜா காதலிக்கும் போது நல்லவன் போல நடித்து விட்டு, தற்போது அதிகளவில் மது அருந்தி விட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் ராஜாவை கொன்றதாகவும் தெரிவித்தார். மேலும், கணவர் மற்றும் தனது செயலால் மகனுக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் குழந்தையையும் கொன்றதாக தெரிவித்தார்.  
 
இதனையடுத்து, போலீசார் தீபிகாவை ஆற்காடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அதே பகுதியை சேர்ந்த ராஜாவின் நண்பரான ஜெயராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஜெயராஜுடன் தீபிகாவுக்கு இருந்த கள்ளக்காதலுக்கு, இடையூறாக இருந்ததாலே இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஜெயராஜ் போலீசார் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1639 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5242 views

பிற செய்திகள்

நள்ளிரவில் திருடனை பிடித்த ஆட்டோ ஓட்டுனர் - பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

நள்ளிரவில் திருட வந்த திருடனை ஆட்டோ ஓட்டுனர் போராடி பிடித்த சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

11 views

உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் - கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த நண்பர்கள் 3 பேரை கைது

உறவினர் வீட்டில் கொள்ளையடித்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

9 views

சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா விமர்சியாக நடைபெற்று வருகிறது.

6 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

130 views

வங்கி ஊழியர் போல் நடித்து ரூ.30 ஆயிரம் கொள்ளை - மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு.

சென்னையில் வங்கி ஊழியர் போல் நடித்து 30 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

9 views

பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி கடத்தல் - இருசக்கர வாகனத்தில் கடத்திய இளைஞன் கைது

பள்ளிக்கு சென்ற அக்கா தம்பி இருவரையும் இருசக்கர வாகனத்தில் வைத்து கடத்தி சென்ற இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.