கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

கஜா புயல் தாக்குதலில் நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவரது வீடு முற்றிலும் இடிந்து சேதமானது. இதனையடுத்து தென்னங்கீற்று முடைந்து குடும்பத்தை காப்பாற்றி வந்த எழிலரசி குடியிருக்க வீடு இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் காமேஸ்வரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எழிலரசிக்கு வீடு கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார். அதன்படி ரஷ்யாவில் வசித்துவரும் தமிழகத்தை சேர்ந்த தனசேகரன்  என்பவர் உதவியுடன் நாம் தமிழர் கட்சி சார்பில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீடு ஒன்று எழிலரசிக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்