ரயில் மூலம் சர்வசாதாரணமாக கஞ்சா கடத்தல் : மொத்தமாக சிக்கிய 60 கிலோ கஞ்சா...

ரயில் மூலம் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்துவந்த கஞ்சா கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
ரயில் மூலம் சர்வசாதாரணமாக கஞ்சா கடத்தல் : மொத்தமாக சிக்கிய 60 கிலோ கஞ்சா...
x
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,  கன்னிகாபுரத்தில் ஜோதி என்ற பெண்ணின் வீட்டில் சோதனையிட்ட போலீசார், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஜோதி அளித்த தகவலின் பேரில், சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமாரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவும், காசிமேடு பகுதியில், பாலமுருகன், இளங்கோவன் ஆகியோரிடம் இருந்து தலா 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிப்பட்ட நான்குபேரிடம் நடத்திய தீவிர விசாரணையில், மீஞ்சூர் பகுதியில் ரமேஷ் என்பவர் சிக்கினார். அவரது வீட்டில் இருந்து, மொத்தமாக 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பிரபல கஞ்சா கடத்தல் மன்ன‌ன் ச‌சிக்குமார் என்பவர் தான் இந்த கஞ்சா கடத்தலுக்கு கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். கஞ்சாவியாபாரிகளுக்கு ஏடிஎம் மூலமாக பணத்தை அனுப்பும் ச‌சிக்குமார், கஞ்சா தயாரானதும், ரமேஷை அனுப்பி ஆந்திராவில் இருந்து சர்க்கார் ரயில் மூலமாக கஞ்சாவை எடுத்து வந்துள்ளார். இந்த தகவல்களை பெற்றுகொண்ட போலீசார், ரமேஷ் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பிரபல கஞ்சா கடத்தல் மன்ன‌ன் ச‌சிக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்