புதிய வாக்கு மையங்கள் அமைக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பது, தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
புதிய வாக்கு மையங்கள் அமைக்கப்படும் - மாநில  தேர்தல் ஆணையம்
x
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்ற நிலையில், நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஆயத்தமாகியுள்ள மாநில தேர்தல் ஆணையம், ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு, வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாக அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் வாக்குச் சாவடி மையங்கள் அறிவிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்கு சாவடி மையங்கள் பயன்படுத்தப்படும் என்றும், ஆயிரத்து நானூறு வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் ஒரு வாக்குச் சாவடி மையமும், இரண்டாயிரத்து எண்ணூறு வாக்காளர்கள் உள்ள பகுதியில் இரண்டு வாக்குப்பதிவு மையமும் அமைக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் இடங்களில், புதிதாக வாக்குச் சாவடி மையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.     


Next Story

மேலும் செய்திகள்