சாலை விபத்தில் பிரபல நீச்சல் வீரர் உயிரிழப்பு : விபத்தா? சதியா? - உறவினர்கள் சந்தேகம்
பதிவு : மே 15, 2019, 03:37 PM
சென்னையில் பிரபல நீச்சல் வீரர் ஒருவர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை ஷெனாய்நகர் கஜலட்சுமி காலனியைச் சேர்ந்த டாக்டர் பத்ரிநாத் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன். நீச்சல் வீரரான இவர், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவில் பணிபுரிந்த பாலகிருஷ்ணன், விடுமுறைக்கு சென்னைக்கு வந்த போது விபத்தில் சிக்கியுள்ளார். நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லியில் இருந்து அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது கான்கிரீட் கலக்கும் லாரியில் மோதி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பாலகிருஷ்ணன் கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தேர்வாகியிருந்தார். காமன்வெல்த் போட்டியில் அவர் பங்கேற்கக்கூடாது என அவரை அப்போது சிலர் தாக்கினர். அதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பாலகிருஷ்ணனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

656 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2311 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

585 views

பிற செய்திகள்

திருச்சி அருங்காட்சியக சிலை திருட்டு வழக்கு : விசாரணையில் வெளியான தகவல்கள்...

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமாரிடம் ரகசிய விசாரணையில் வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேர் குறித்தும் மாயமான சிலைகள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

13 views

சேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

12 views

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான பல்வேறு பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னை வடபழனியில் நடைபெற்று வருகிறது.

5 views

இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்...

அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார்.

30 views

"நதிகள் மீட்பு பயணம் 100 சதவீதம் வெற்றி" - ஜக்கி வாசுதேவ்

"காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

18 views

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்

சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.