தேனி : வைகை அணை அருகில் இருந்தும் குடிநீருக்காக அல்லாடி வரும் கிராமமக்கள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 2 கிலோ மீட்டர் தூரத்தில் வைகை அணை இருந்தும் குடிநீருக்காக கிராமமக்கள் அல்லாடி வருகின்றனர்.
தேனி : வைகை அணை அருகில் இருந்தும் குடிநீருக்காக அல்லாடி வரும் கிராமமக்கள்
x
வைகை அணை அருகே அமைந்துள்ள கோவில்பட்டி கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு ஆண்டாகவே சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. கோவில்பட்டிக்கு வாரத்திற்கு ஒரு நாள் அதுவும் ஒரு மணிநேரம் மட்டுமே மிகமிக குறைந்த அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதன் காரணமாக கோவில்பட்டி கிராம மக்கள் தண்ணீருக்காக அல்லாடும் நிலை உருவாகியுள்ளது. காலையில் எழுந்தவுடன் தண்ணீருக்காக காலி குடங்கள் மற்றும் பேரல்களை தள்ளுவண்டியில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் கிராமமக்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் மொத்தமாக சேர்ந்து டிராக்டரை வாடகைக்கு படித்து தண்ணீர் கொண்டு வந்து பகிர்ந்து கொள்கின்றனர். வைகை அணை அருகில் இருந்தும் தங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்று வேதனையுடன் கிராமமக்கள் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்