ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை அடுத்துள்ள மலை அடிவாரத்தில் பழங்கால ஓடுகள்,  கற்கள் உள்ளிட்டவை  அதிகளவில் காணப்படுகின்றன. இது குறித்து தகவலறிந்த  கல்லூரி மாணவ-மாணவிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது பழங்கால கற்கள் உள்ளிட்டவற்றை கண்டெடுத்தனர். 

அப்பகுதியில்  வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டிய போது, பழங்கால ஓடுகள் கிடைத்ததாகவும் , அவை பழங்கால முதுமக்கள் தாழிகளின் ஓடுகளாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியை பாதுகாத்து தொல்லியல்துறையினர் ஆய்வு நடத்த அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்