வீராணம் ஏரிக்கு அருகில் குடிநீர் வசதி இல்லாத கிராமங்கள் : 25 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம்

ஊரை விட்டு வெளியேற உள்ளதாக மக்கள் குமுறல்
x
காட்டுமன்னார்கோவில் அருகே குடிநீர் வசதி இல்லாத கிராமத்தை விட்டு வெளியேற உள்ளதாக  மக்கள் வேதனையோடு கூறியுள்ளனர். அங்குள்ள ஆட்கொண்டநத்தம், சிவக்கம்,  ராதாநல்லூர் ஆகிய கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று  கூறப்படுகிறது.  குடிநீருக்காக தினந்தோறும் இரண்டு, மூன்று கிலோமீட்டர்கள் அலைவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். அருகில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர்  கொண்டு செல்லப்படும் நிலையில், தங்கள் கிராமங்களுக்கு குடிநீர் வசதி மறுப்பதாகவும் கூறினர். அதன் காரணமாக மூன்று  கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற உள்ளதாக கூறியதுடன், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க  வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்